Advertisment

சாக்கடை தண்ணீரில் காய்களை அலசும் நபர்... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவர் காய்கறிகளை சாக்கடை தண்ணீரில் சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார சீர்க்கேட்டால் பல்வேறு நோய்கள் பரவி வரும் சுழ்நிலையில், தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் 50 வயது இருக்கும் நபர் ஒருவர், தள்ளுவண்டியில் காய்கறிகளை தள்ளிக்கொண்டு வருகிறார். யாரும் இல்லாத இடமாக பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு கூடையை எடுத்துக்கொண்டு காய்கறிகளை அள்ளிக்கொண்டு அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் திறந்தவெளி சாக்கடை கால்வாய்க்கு சென்று காய்கறிகளை சாக்கடை தண்ணீரில் கொட்டி அலசுகிறார்.

Advertisment

jk

நெஞ்சை பதைக்க வைக்கும் இந்த நிகழ்வை எவ்வித சலனமும் இல்லாமல் அவர் செய்து வந்துள்ளார். இதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோ எடுத்து மட்டுமில்லாமல் எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள், இது மக்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படுத்தும் அல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் காய்கறி கடைக்காரர் அதற்கு திமிராக பதிலளித்ததால் கோபமான சிலர், அவரின் காய்கறிகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக குப்பையில் வீசினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

vegetables
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe