
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்பு பிடி வல்லுனரானவாவா சுரேஷ். இவர் பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சிறிய பாம்புகள் முதல் கரு நாகப்பாம்பு உள்ளிட்ட அரியவகை பாம்புகளை பிடிப்பதோடு மட்டுமல்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்ல பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றபோது வாவா சுரேஷை பாம்பு கடித்தது. கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாவா சுரேஷ் சுயநினைவை இழந்த நிலையில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த பிப்.7 ஆம் தேதி அவர் சிகிச்சையின் பலனாக முழுமையாகக் குணமடைந்து வீடு திருப்பினார். மேலும் 'தான் உயிருடன் இருக்கும்வரை பாம்புகளை பிடிப்பேன். மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவேன்' என வாவா சுரேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் பாம்பு பிடிக்க துவங்கியுள்ளார் வா வா சுரேஷ். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள சாரமோடு என்று இடத்தில் முகேஷ் என்பவரின் வீட்டில் பாம்பு பதுங்கியுள்ளதாக வாவா சுரேசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வாவா சுரேஷ் பைக் மீது இருந்த பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலுக்குள் அடைத்து அதனை வனப்பகுதிக்குள் விட்டார். மீண்டும் வாவா சுரேஷ் பாம்பு பிடிக்க இருப்பதை அறிந்த மக்கள் அவரை பார்ப்பதற்காகக் குவிந்திருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)