Advertisment

மேகதாது அணை விவகாரம்; பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு எதிர்ப்பு...

vat

வட்டாள் நாகராஜன் தலைமையில் தமிழக எல்லை பகுதியில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி அவர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி அருகே உள்ள அத்திப்பள்ளி பகுதியில் மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வட்டாள் நாகராஜன் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். அவருடன் கன்னட அமைப்பினரும் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அப்பொழுது பேசிய வட்டாள் நாகராஜ், 'தமிழக மக்கள் மேகதாதுவில் அணை கட்ட ஒப்புக்கொள்ளவில்லை எனில் இனி தமிழ் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்டப்படும்' என கூறினார். மேலும் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் தற்பொழுது அங்கு வெளியாகி ஓடிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

karnataka vatal nagaraj megathathu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe