Skip to main content

இடைதேர்தலில் நோட்டா-விடம் தோற்ற வாட்டாள் நாகராஜ்!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு சில தினங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சிவாஜி நகர் தொகுதியில் வாட்டாள் நாகராஜ் போட்டியிட்டார். பாஜக சார்பில் தமிழரான முன்னாள் கவுன்சிலர் சரவணா, காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத், மஜதவின் தன்வீர் அகமது ஆகியோர் போட்டியிட்டனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில், வெற்றியை தீர்மானிப்பவர்களாக கருதப்பட்டனர். தமிழர் ஓட்டுகளை குறிவைத்து தமிழரான சரவணாவுக்கு பாஜகவுக்கு வாய்ப்பு அளித்தது. இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. 



சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத் வெற்றி பெற்றார். அவருக்கு 49,980 ஓட்டுகள் கிடைத்தன. சரவணாவுக்கு 36,369 ஓட்டுகளும், தன்விர் அகமதுக்கு 1098 ஓட்டுகளும் கிடைத்தன.ஆனால், தீவிர கன்னட ஆதரவாளராக காட்டிக் கொண்ட வாட்டாள் நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில், நோட்டாவுக்கு 986 ஓட்டுகள் விழுந்துள்ளது. வாட்டாள் நாகராஜ் நோட்டாவிற்கு கீழே ஓட்டு வாங்கியதால் அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்