Advertisment

விஷஜந்து எச்.ராஜா! - துரைமுருகன் காட்டமான பேட்டி

duraimurrugan

லெனின் சிலை திரிபுராவில் அகற்றப்பட்டது குறித்தும். தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்றும் எச்.ராஜா பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் வேலூரில் செய்தியாளர்களுக்கு தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் 6.3.18 ந்தேதி இரவு அளித்த பேட்டியில், அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்பார்கள். அது போல தான் எச்.ராஜா பேசி வருகிறார்.

Advertisment

ஒரு சிலையை உடைப்பதாலோ, தலைவர்களை சுடுவதாலோ அவர்கள் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ந்த லட்சியங்களை யாராலும் அழிக்க முடியாது. லெனின் சிலையை அகற்றி விடுவதால் அவரின் சித்தாந்தம் பொது உடமை கருத்துக்கள் காணாமல் போகும் என்பது பைத்தியக்கார தனம். யாரோ சிலர் வெறி பிடித்தவர்கள், பைத்தியகாரர்கள், குடிகாரர்கள் திரிபுராவில் லெனின் சிலையை உடைத்துள்ளார்கள். எதற்காக உடைக்கப்பட்டது என்ற காரணமே தெரியாமல் எச்.ராஜா பேசி வருகிறார். லெனின் சிலை அகற்றியதை நாணயம் உள்ள அரசியல் வாதியாக இருந்தால் எச்.ராஜா கண்டித்திருக்க வேண்டும்.

Advertisment

பெரியாரால் தான் நாங்கள் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறோம். பூஜை, புனஸ்காரம் மற்றும் புராண இதிகாசத்தின் பெயரால் மக்களை அடிமைபடுத்தி இங்கு ஒரு இனம் வாழ்ந்து வந்தது. அடிமைப்பட்டு வாழ்ந்த மக்களுக்கு அறிவூட்டி மனிதார்களாக்கிய பெருமை பெரியாருக்கு உண்டு. அதனால் இங்கு காவிகளின் எண்ணம் பலிக்காது.

விஷ ஜந்துவின் விஷம் எச்.ராஜா மண்டையில் ஊரிக்கிடக்கிறது. எச்.ராஜாவுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். இது திரிபூரா அல்ல இது பெரியார் மண். தமிழக அரசியல் கட்சிக்கும் மத்திய அரசுக்கும் சொல்கிறேன் பிரமர் மோடிக்கும் சொல்கிறேன் இப்படிபட்ட வெறிபிடித்தவர்களை வளர விடக்கூடாது. எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்தை வரவேற்கிறேன் என்றார்.

interview Particular Vasantha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe