‘ஹரே ராம்’ என்று அச்சிடப்பட்ட மேலாடையை அணிந்ததால் பிரபல இந்தி நடிகை வாணி கபூருக்கு எதிராக இந்து மதத்தினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை வாணிகபூர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அவர் அணிந்திருந்த மேலாடையில் ‘ஹரே ராம்’ என்ற பெயர் அச்சிடப்பட்டிருந்ததைக்கண்டு இந்து மதத்தினர் கொந்தளித்தனர். மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில், இந்து மதத்தினரை கேவலப்படுத்த வேண்டும் என்றே இவ்வாறு செய்துள்ளார் என வாணி கபூருக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், வாணிகபூர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் புகார் அளித்துள்ளனர்.