Advertisment

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட வேன்; சாதுரியமாகச் செயல்பட்ட பொதுமக்கள்!

Van swept away in flood Smart people

Advertisment

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாக்குளம், விசாகப்பட்டினம், காக்கிநாடா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதனால், அந்தப் பகுதியிலுள்ள ஓடைகள், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஸ்ரீகாக்குளம் மாவட்டம், பீஜிபுரம் அருகிலுள்ள ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், வாகனங்கள் ஓடை மீது போடப்பட்டுள்ள தரைப்பாலம் வழியாகச் செல்கின்றன.

ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளத்திற்கிடையே தரைப் பாலத்தைக் கடந்து சென்ற வாகனங்களில், வேன் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது. கொஞ்ச தூரம் தண்ணீரில் தத்தளித்துச் சென்ற வேன் கரை ஒதுங்கிய நிலையில், அதன் ஓட்டுநரை அந்தப் பகுதி மக்கள் காப்பாற்றினர். வேனை மீட்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

rain van flood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe