Skip to main content

கூகுள் மேப்பை நம்பி மலை உச்சியில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்!

Published on 15/02/2020 | Edited on 17/02/2020


கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற டிரைவர் மலை உச்சியில் சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள மலைகொண்டை சுற்றுலா தளத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வாகனத்தில் வந்தவர்களை தங்கும் விடுதியில் இறக்கிய ஓட்டுவர், சாப்பாடு வாங்குவதற்காக கூகுள் மேப் உதவியுடன் வண்டியை ஹோட்டல் உள்ள இடத்திற்கு இயக்கியுள்ளார்.



மேப் காண்பித்த வழிதடத்தின் வழியாக சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு குறுகலான மலை உச்சியில் அவரின் வாகனம் சிக்கி கொண்டது. வாகனத்தை பின்னால் எடுக்கவும் முடியாததால், தன்னோடு வந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். பிறகு அங்கு வந்த மீட்புப்படையினர் அவரை மீட்டனர். கூகுள் மேப் பொய் சொல்லாது என்று நினைத்து இவ்வாறு வந்து சிக்கிக்கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்