style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று தற்போது காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களதுஇரங்கல்களைதெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 22-ஆம்தேதிவரை 7 நாட்களுக்கு துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 7 நாட்களும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.