Skip to main content

வாஜ்பாய் கவலைக்கிடம் - யாகம் வளர்த்து மாணவர்கள் பிரார்த்தனை

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
வ்

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாய்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.  அவரது உடல்நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

மூட்டுவலி பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த வாஜ்பாய்க்கு கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரால் சரிவர பேசமுடியாமல் போனதும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.  94 வயதாகும் வாஜ்பாய்க்கு வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.


தற்போது நிமோனியா தாக்கம் காரணமாக வாஜ்பாயின் இரண்டு நுரையீரல்களும் நல்ல நிலையில் இல்லை என்றும், சிறுநீரகங்களும் பலவீனமாக உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

இதையடுத்து, வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை! (படங்கள்)

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (25/12/2021) காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். 

 

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். 

 

 

Next Story

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூபாய் 100 நாணயம் வெளியீடு

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
Rupees



முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவம் பொறித்த ரூபாய் 100 நாணயம் வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.