25 அடி உயர வாஜ்பாயின் சிலை இன்று திறப்பு

முன்னாள் பிரதமர் வாய்பாயின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அவருக்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்க இருக்கிறார். இதற்காக இன்று லக்னோ வரும் பிரதமர் மோடி, சிலை திறப்புக்கு பிறகு வாஜ்பாய் மருத்துவ பல்கலை கழகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

குடியுரிமை போராட்டம் உச்ச கட்டத்தில் இருப்பதால் சிலை திறக்கும் நேரத்தில் அதனை எதிர்த்து யாரும் போராட்டம் செய்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக லக்னோ நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்ட நிலையில் உ.பி மாநிலம் பரபரப்பாக காணப்படுகின்றது.

Atal Bihari Vajpayee
இதையும் படியுங்கள்
Subscribe