Advertisment

இரவு நேரத்தில் வந்த அழைப்பு; மத்திய அமைச்சருடன் வைகோ, துரை வைகோ சந்திப்பு!

Vaiko and Durai Vaiko meet with the Union Minister

மதிமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, தனது தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் -யிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது மதிமுக தலைவரும், எம்.பியுமான வைகோவும் உடன் இருந்துள்ளார்.

Advertisment

மத்திய அமைச்சருடனான சந்திப்பையும், அவரிடம் அளித்த கோரிக்கைகளையும் அறிக்கையாக துரை வைகோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், நேற்று (18.12.2024) இரவு 10 மணிக்கு அவரது இல்லத்திற்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. இருமல் சளி காரணமாக உடல் நலன் குன்றி இருக்கும் தலைவர் வைகோவையும் இரவென்றும் பாராமல் தூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்துச் சென்றேன்.

Advertisment

தலைவர் வைகோ மக்கள் பணி என்றால் இரவு பகல் பார்க்காத மாமனிதர் என்று நாம் அறிந்தது போலவே கடுமையான பனியிலும், இந்த வயதிலும் சில நிமிடங்களில் தயாராகி வந்தார். நமக்கும் ஒன்றிய அரசுக்கும் எவ்வளவு பெரிய கொள்கை முரண் இருந்தபோதிலும், எவ்வளவு பெரிய சித்தாந்த எதிர்ப்பு இருந்தாலும் நம் தலைவர் மீது ஒன்றிய அமைச்சர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதையை நேற்றும் நான் கண்கூடாக கண்டுணர்ந்தேன்.

அந்த மரியாதையை எனது திருச்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதற்கு நான் பயன்படுத்த விரும்பினேன், தலைவர் வைகோவும் ஆர்வமோடு ஆமோதித்தார். நானும், தலைவர் வைகோவும் சென்று அமைச்சரை சந்தித்து உரையாடி எனது திருச்சி மக்களின் ரயில்வே துறை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன்.

கோரிக்கைகளின் விபரம் வருமாறு:-

01).1998 முதல் 2016 வரை இந்திய ரயில்வேயில் ICF/தெற்கு இரயில்வே பயிற்சி முடித்த அப்பிரண்டிஸ் (Act Apprentices) வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரிக்கை.

02).திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, கோவிலூர் மற்றும் நந்தவனம் பகுதிகளில் LC 67 மற்றும் LC 68 (மூடப்பட்டவை) இடையே சாலை இணைக்குமாறு கோரிக்கை.

03).திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள LC 244/A கேட் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை.

04).திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் பேரூராட்சி ஒன்றியம், இனம்குளத்தூர் பகுதியில் அமைந்துள்ள எல்.சி 265 இன் இடத்தில் ஆர்.ஓ.பி கட்ட அனுமதி அளிக்க வேண்டுகோள்.

05).COVID தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப்போல சமுத்திரம் இரயில் நிலையத்தில் இரயில்கள் நிற்க வேண்டுகோள்.

06).எம்.கே கோட்டை மஞ்சத்திடல் கம்பி கேட் பகுதியில் சுரங்கப்பாதைக்கு பதிலாக ஆர்.ஓ.பி கட்ட அனுமதி அளிக்க வேண்டுகோள்.

07).திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மேலக்குமரேசபுரம் பகுதியில் எல்.சி 317/ஈ கேட் இடத்தில் ஆர்.ஓ.பி கட்ட அனுமதி அளிக்க வேண்டுகோள்.

08).திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் இரயில்கள் நிற்க வேண்டுகோள்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் எனது கடிதங்களை அமைச்சரிடம் கொடுக்கும்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் 5,42,213 நம்பிக்கைகளை வாக்குகளாக பெற்று வென்ற நான், திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நலனுக்கு பாடுபடுவதே முதன்மை நோக்கமாக கருதி செயலாற்றி வருகிறேன். இந்த கோரிக்கைகளில் சில கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திருச்சி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது என்பதையும் அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி இந்த கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கினேன்.

கோரிக்கை கடிதங்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், பரிசீலித்து விட்டு, நிச்சயம் நிறைவேற்றித்தருவதாக கூறினார். அமைச்சரிடம் நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டபோது, தலைவரையும், என்னையும் அழைத்து, உபசரித்து விடைகொடுத்து அனுப்பிவைத்தார் அமைச்சர். திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் என்று நம்பிக்கையோடு புறப்பட்டுவந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

mdmk vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe