Advertisment

"தடுப்பூசி உற்பத்தி பாதிக்கப்படும்" - சீரம் நிறுவனம் கவலை!

serum institute

Advertisment

இந்தியாவில், கரோனாதடுப்பூசியானகோவிஷீல்டை தயாரிக்கும்சீரம்நிறுவனத்தில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்ஐந்து பேர் உயிரிழந்தனர்.

புதிதாகக்கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடத்தில், நடைபெற்றவெல்டிங்பணியின்போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.இருப்பினும் இந்த தீ விபத்திற்கான காரணம்இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இந்த விபத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் வழங்கப்படும் என சீரம்நிறுவனத்தின் தலைமை நிர்வாகஅதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், சீரம்நிறுவனம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பொருளாதாரஇழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது எதிர்காலத்தில் பிசிஜி மற்றும் ரோட்டா தடுப்பூசிகளின் உற்பத்தியைப் பாதிக்கும்எனவும்தெரிவித்துள்ளது.

covishield fire
இதையும் படியுங்கள்
Subscribe