ADVERTISEMENT

தடுப்பூசி முன்பதிவு தாமதம்... ஆரோக்கிய சேது நிர்வாகம் விளக்கம்!

05:46 PM Apr 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 18 வயது மேற்பபட்டோருக்கு வரும் மே 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 18 வயது மேற்பபட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு தொடங்கியது. cowin.gov.in என்ற தளத்திலோ, ஆரோக்கிய சேது செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருவதால் ஒடிபி எண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேதி போன்ற விவரங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலமணி நேரமாக முன்பதிவுவில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆரோக்கிய சேது நிர்வாகமவிளக்கமளித்துள்ளது.

அரசு, தனியார் மையங்கள் இடம், நேரம் குறித்த பட்டியல் தயரான பின்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவின் தளத்தில் தொடர்ந்து முன்பதிவு செய்யலாம் எனவும் ஆரோக்கிய சேது செயலி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT