மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவிஏற்கவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ்மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின்கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனாதலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரேஇருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தனதுகருத்து என்ன என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால்மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
நாளை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மஹாராஷ்டிரா ஆளுனரை சந்திக்கஇருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.