மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் அனைத்து காட்சிகளிலும் உள்ள அதிருப்தி தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.

Advertisment

uttarprdesh bjp mp joins congress ahead of loksabha election

அந்த வகையில் முன்னாள் நிதியமைச்சராக யஸ்வந்த் சின்ஹா பாஜக விலிருந்து சமீபத்தில் விலகினார். அதனை தொடர்ந்து பட்னாவின் பாஜக எம்.பி யான சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சிக்கு மாறுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். இதன் பின்னர் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தின் எட்டவா தொகுதியில் பாஜக எம்.பி ஆக இருந்த அசோக் குமார் தோஹ்ரே ராகுல்காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜகவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகுவது அக்கட்சிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.