நேற்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில்பவன் குமார் என்ற இளைஞன் தவறுதலாக பாஜக வுக்கு வாக்களித்ததால்தனது விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pawan.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சஹர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பவன் குமார் எனும் இளைஞர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் தவறுதலாக அதற்கு கீழே இருந்த பாஜக வுக்கு வாக்களித்துள்ளார். இதன் பிறகு வீட்டுக்கு வந்த அவர் கோபத்தில் மை தடவப்பட்ட அந்த விரலை வெட்டிக்கொண்டதாக ஊடகம் ஒன்றிடம் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அவர் பேசிய அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)