மதுபோதை காரணமாக தனது அண்ணியின் மூக்கை இளைஞர் ஒருவர் அறுத்த சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

sss

உத்திர பிரதேசம் மொரடாபாத் பகுதியில் வசித்து வந்த ஒரு பெண் மூக்கு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அந்த பெண், "என் கணவருடைய தம்பி கத்தியால் என் மூக்கை அறுத்துவிட்டார். எதனால் இப்படி செய்தார் என தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் நடந்த போது அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்" என தெரிவித்தார்.

Advertisment

இது குறித்து பேசிய மாஜ்ஹோலா காவல் நிலைய அதிகாரி, "இது அவர்களின் குடும்ப பிரச்சனை போல தெரிகிறது. இன்னும் முழுமையாக விசாரிக்கவில்லை. குற்றவாளி எங்களுடைய காவலில் இருக்கிறார். முறையான விசாரணைக்கு பின்னரே விவரங்கள் தெரிய வரும்“ என்று கூறியுள்ளார். மதுபோதையில் இளைஞர் ஒருவர் தனது அண்ணியின் மூக்கையே அறுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.