uttarpradesh state kanpur incident police

உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Advertisment

டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தில் நேற்று (09/07/2020) கைதானார் ரவுடி விகாஸ். அதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வரும் போது விகாஸ் துபே இருந்த கார் விபத்துக்குள்ளானது. விபத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க முயன்ற விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் தகவலை உத்தரப்பிரதேச ஐ.ஜி.மோஹித் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment

ஏற்கனவே விகாஸ் துபேவின் கூட்டாளிகள் சிலரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது உத்தரப்பிரதேச மாநில போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுடி என்கவுன்ட்டர் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், "பிரபல ரவுடி விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற கார் கவிழவில்லை; கவிழ்க்கப்பட்டிருக்கிறது; அரசு தனது ரகசியத்தைக் காப்பாற்றிக்கொள்ள காரை கவிழ்த்துள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.