Advertisment

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து அயோத்தியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

மகாராஷ்டிரா மாநில சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் 18 எம்.பிக்களுடன் நாளை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் இன்று ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதே போல் அயோத்தியில் ராமஜென்ம பூமி தலைவரின் 81-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அயோத்தி நகரம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

Advertisment

uttarpradesh ayodhya ram temple tight security alert this place fully search the

Advertisment

இந்நிலையில் அயோத்தியில் பேருந்துகள், ரயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், லாட்ஜிகள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி அங்குள்ள ஃபைஸாபாத் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அயோத்தி பகுதி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தீவிர சோதனையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Ayodhya India ram temple tight security uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe