உத்தரப்பிரதேசத்தின் பிதூர் பகுதியை சேர்ந்த இரண்டு காவலர்கள் போலீஸ் வாகனத்தின் முன் இருக்கையில் உட்காருவது யார் என்பதற்காக சண்டை போட்டுக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

uttarpradesh police fights for car seat video went viral

பிதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரும் ரோந்துப்பணிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென இருவரும் சாலையிலேயே உருண்டு புரண்டு சண்டையிட ஆரம்பித்துள்ளனர். இதனைக் கண்ட மற்றொரு காவலர், அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார். பின்னர் இருவரிடம் விசாரித்தபோது Patrol வாகனத்தின் முன் சீட்டில் யார் அமர்வது என்பதற்காகவே இருவரும் சண்டையிட்டது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/XvBDWl8PKao.jpg?itok=vamor4lT","video_url":" Video (Responsive, autoplaying)."]}