உயிரிழந்தவரின் உடலைக் குப்பை வண்டியில் அப்புறப்படுத்திய அவலம்... வீடியோ வெளியானதால் சர்ச்சை...

uttarpradesh mans body taken in garbage vehicle

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலக வளாகத்தின் அருகே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஒருவரின் உடலை அங்கிருந்த அதிகாரிகள் குப்பை வண்டியில் அப்புறப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது அன்வர் (45) அப்பகுதி அரசு அலுவலகத்திற்கு தனது சொந்த வேலைக்காகச் சென்றுள்ளார். அப்போது, அலுவலக வளாகத்தின் அருகே திடீரென மயங்கிவிழுந்து அவர் உயிரிழந்துள்ளார். சாலையில் அன்வர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததை கண்டஅங்கிருந்த அதிகாரிகளும் காவலர்களும் அவருக்கு கரோனா இருக்கலாம் என்ற பயத்தினால் அவரின் அருகில் செல்ல அச்சப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த மாநகராட்சி குப்பைவண்டியில் அன்வரின் உடலைஎடுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, அதிகாரிகளின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக 4 மாநகராட்சி ஊழியர்களும், 3 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

corona virus uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe