உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் இன்று காலை நெடுஞ்சாலை பகுதியில் வேகமாக சென்ற ஒரு காரின் பேனட்டில் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் பகுதியில் ஒரு வெள்ளை நிற காரில் வந்தவருக்கு இன்னொருவருக்கும் சாலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காரில் வந்தவர் அங்கிருந்து கிளம்ப முயன்றபோது மற்றொருவர் காரின் முன்பக்கம் சென்று அவரை தடுத்துள்ளார்.
ஆனால் அந்த காரில் இருந்த நபர் தனது காரை வேகமாக நகர்த்தியுள்ளார். இதனால் கார் எதிரே நின்றவர் கட்டுப்பாட்டை இழந்து காரின் பேனட்டை பிடித்தபடி காரை நிறுத்தச்சொல்லி கத்தியுள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அந்த காரை வேகமாக இயக்கியள்ளார் அந்த காரில் இருந்தவர்.
இதனால் சுமார் 2 கிமீ தோற்றம் அதிவேகமாக சென்ற அந்த காரின் பேனட்டை பிடித்தபடியே அந்த நபர் சென்றுள்ளார். பின்னர் பொதுமக்கள் அந்த காரை மடக்கி பிடித்ததால் அந்த கார் நின்றுள்ளது. அதன் பிறகு அங்கு வந்த போலீசார் காரை ஓட்டிய நபரை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.