Advertisment

ஆபாசமாக கட்டிப்பிடித்து பயணம்; காதல் ஜோடியை வெளுத்த காவல்துறை

uttarpradesh lovers two wheeler video viral 

காதல் ஜோடிகள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அதிவேகமாகச்செல்வது;ஆபத்தான முறையில் அமர்ந்து செல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்துஅதிகரித்துவருகின்றன. சில சமயங்களில்காதலின் உச்சத்தில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் பயணிப்பதும், தங்களுக்கு மட்டுமல்லாது சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து உண்டாக்கும்வண்ணம் பயணிப்பதும் தொடர்கதையாகி உள்ளது.

Advertisment

அந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம் காதல் ஜோடி ஒன்று சாலையொன்றில் இருசக்கர வாகனத்தில் செல்கின்றது. அதில், காதலன் வாகனத்தை ஓட்டிச் செல்ல,அவருக்கு முன்புறமாக காதலனை கட்டியணைத்து அவரைபார்த்தபடி காதலி அமர்ந்துசெல்வது போன்று வீடியோவில் உள்ளது. இவ்வாறு ஆபத்தான முறையில் சாலைகளில் செல்லும் காதல் ஜோடிகள் குறித்து இணையவாசிகள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment

சமூக வலைதளங்களில்இந்த வீடியோ வைரலானதால் போலீசார் இந்த இளம் காதல் ஜோடியைகைது செய்துள்ளதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே இதேபோன்று காதல் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் பயணம்செய்த வீடியோ ஒன்றும் வைரலானதுகுறிப்பிடத்தக்கது.

lovers uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe