Advertisment

நெருங்கும் தேர்தல்; மாணவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் டேப்லெட் தர தயாராகும் உ.பி அரசு!

yogi aditynath

Advertisment

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்த அம்மாநில முதல்வர்யோகி ஆதித்யநாத்,ஒரு கோடி ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள் வாங்கப்பட்டு, அவை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும், திறன் மேம்பாடு பயிற்சிகளில் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இது அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு, இளைஞர்களை கவரும் விதமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அப்போது எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்தநிலையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்கள் வழங்குவது இந்த மாதத்தில் தொடங்கும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 5 லட்சம்ஸ்மார்ட்ஃபோன்களும், 2.5 லட்சம்டேப்லெட்களும் வழங்கப்படவுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Assembly election students YOGI ADITYANATH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe