Advertisment

முதல் தடவை ஆயிரம்... பின்னர் ஒவ்வொரு முறையும் பத்தாயிரம்! - முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த உ.பி அரசு அதிரடி!

mask

இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கரோனாதடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறுமத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

Advertisment

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனாதடுப்பு நடவடிக்கைகளைப்பின்பற்றாதவர்களுக்கு மாநில அரசுகள், கடுமையான அபராதங்களை விதித்துவருகின்றன. இந்தநிலையில்மக்களை முகக்கவசம் அணியவைக்கஉத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Advertisment

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1,000 ரூபாயைஅபராதமாக விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. அபராதம் செலுத்தியவர்கள், அதன்பிறகும் முகக்கவசம் அணியாவிட்டால், ஒவ்வொரு முறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு அதிரடியாக அறிவித்துள்து.

corona virus Mask uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe