நேற்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களும் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் உற்றபிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அம்மாநில அமைச்சர் லக்ஷ்மி நாராயண் கலந்துகொண்டார். அப்போது அவரது ஷூவை அங்குள்ள அரசு அதிகாரி ஒருவர் அவருக்கு மாட்டிவிட்டு லேஸை கட்டிவிட்டார். அவர் அமைச்சரின் ஷூ லேஸை கட்டிவிடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனையடுத்து அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், ராமாயணத்தில் ராமனின் காலணிகளை கொண்டு அவரது சகோதரன் பரதன் ஆட்சியே நடத்தினார். அதுபோல ஒரு சகோதரரின் உதவியாக இதனை பாருங்கள் என தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக விளக்கம் கொடுத்த நிலையில், பலரும் அவர் செய்தது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.