Advertisment

உத்தரபிரதேசத்தில் 78 பேர் என்கவுண்டரில் சுட்டு கொலை...யோகி ஆதித்யநாத்தின் சாதனை பட்டியல்...

hjnmgh

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு கடந்த 16 மாதங்களில் 3000 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடந்துள்ளதாக அம்மாநில அதிகாரபூர்வ அறிவிக்கை தெரிவிக்கிறது. இதில் இதுவரை 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து துறைகளிலும் உத்தரபிரதேச அரசின் சாதனைகள் குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மாநில காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.இந்த விவகாரம் அம்மாநிலத்தில் அரசியலில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த என்கவுன்டர்களில் பாஜக தந்து அரசியல் எதிரிகள் மற்றும் வேண்டாதவர்களை அரசு சுட்டுக்கொல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றது. மேலும் சராசரியாக ஒரு நாளைக்கு 6 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, 14 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஒவ்வொரு மாதமும் சுமார் 4 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

yogi adithyanath uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe