வட இந்தியாவில் மிக பிரபலமான பண்டிகையான ஹோலி பண்டிகை நேற்று வடமாநிலங்கள் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். ஒருவர் மேல் ஒருவர் கலர் பொடிகளை பூசி கொண்டாடும் இந்த விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பாஜக எம்.எல்.ஏ யோகேஷ் வெர்மா மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. காலில் சுடப்பட்டு காயமடைந்த யோகேஷ் வெர்மா சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.