உத்தரப்பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தர்வேஷ் யாதவ் என்ற பெண் வழக்கறிஞர் சக வழக்கறிஞரால்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Advertisment

uttarpradesh bar council president shot by colleague

பார் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2 நாட்களே ஆன நிலையில் நேற்று மாலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கறிஞரான அரவிந்த்குமார் மிஸ்ராவின் அறையில் அமர்ந்து மற்றொரு வழக்கறிஞர் மனீஷ் சர்மா என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மனீஷ் சர்மா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தர்வேஷ்யாதவை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தர்வேஷ் உயிரிழந்துள்ளார்.

Advertisment

பின்னர், மனிஷ் சர்மா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.