uttarapradesh assembly election 2022 congress party cm candidate priyanka gandhi explain

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் யார் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவார்? என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தார். உங்களுக்கு என்னை தவிர வேறு முகம் தெரிகிறதா என்று பதில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் அவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனபேசப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்இதற்கு விளக்கம்அளித்துள்ள பிரியங்கா காந்தி, மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி கேட்கப்பட்டதால், அந்த பதிலைத் தாம் கூறியதாகவும், தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும் கூறியுள்ளார்.