Skip to main content

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 'கும்பமேளா'! - அச்சத்தில் ஹரித்துவார் மக்கள்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

uttarakhand haridwar district ganga river Maha Kumbh


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

 

uttarakhand haridwar district ganga river Maha Kumbh

 

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பமேளா' கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவில் ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் புனித நீராட, இன்று (12/04/2021) பக்தர்கள், சாமியார்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர். கரோனா நெகட்டிவ் சான்றிதழ் உடன் வருபவர்களுக்கு மட்டுமே மகா கும்பமேளாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், புனித நீராடலின் போது பக்தர்கள், சாமியார்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வழக்கமாக மகா கும்பமேளா திருவிழா மூன்று மாதங்கள் நடைபெறும் நிலையில், கரோனா காரணமாக ஒரு மாதம் மட்டுமே திருவிழா நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. 

 

இன்று (12/04/2021) கங்கையில் புனித நீராட உகந்த நாள் என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள், சாமியார்கள் ஹரித்துவாரில் குவிந்ததால் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக்கூடும் என அச்சத்துடன் உள்ளனர் அப்பகுதி மக்கள். ஏப்ரல் 14, ஏப்ரல் 27 ஆகிய நாட்கள் புனித நீராட உகந்த நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மகா கும்பமேளா காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

uttarakhand haridwar district ganga river Maha Kumbh

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து கோயிலில் தரிசனம் செய்வர். இதனால், சுற்றுலாத் தொழில் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வரி வருவாய் அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 

இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஹரித்துவார் நகரத்தில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 45 லட்சம்; வங்கி பணமா? ஹவாலா பணமா? - கார் நம்பரால் பரபரப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
45 lakhs seized in car with car number

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனைச் சாவடியில் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர்  மார்ச் 19 ஆம் தேதி இரவு அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 45 லட்சம் பணம்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறக்கும் படை அதிகாரியான செந்தில் குமார் காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி கார் வந்தது தெரிந்தது. அந்த பணம் தனியார் வங்கிக்குச் சொந்தமானது என்று தெரிவித்தனர். அவர்கள் வைத்திருந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த தொகையும் , காரில் இருந்து தொகையும் சரியாக இருந்தது. ஆனால் ஆவணத்தில் இருந்த காரின் எண்ணும், பணம் கொண்டு வந்த காரின் எண்ணும்  வேறுபட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதுகுறித்து விசாரித்தபோது சரியாக பதில் சொல்லவில்லையாம். இதனால் பணத்துடன் அந்த கார் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆவணங்கள் மாறி மாறி இருப்பதால் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.