
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் திரிவேந்திரசிங்ராவத். இவருக்குத் தற்போது கரோனாதொற்று உறுதியாகியுள்ளது.
திரிவேந்திர சிங்ராவத்திற்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு, கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்குகரோனாதொற்று ஏற்பட்டிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தான் நலமாகஇருப்பதாகவும், கடந்த சில நாட்களாக,தன்னைச் சந்தித்தவர்களைக் கரோனாபரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனதுட்விட்டர் பக்கத்தில்,"இன்று நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில்எனக்குகரோனாபாசிட்டிவ்என வந்துள்ளது.எனது உடல்நிலை நன்றாக உள்ளது, எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நான் வீட்டில் தனிமையில் இருக்கப்போகிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில்இருந்தவர்கள், தயவுசெய்து உங்களைநீங்களேதனிமைப்படுத்திக்கொள்வதோடு, கரோனாபரிசோதனையும்செய்துகொள்ளுங்கள்"எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)