பாஜக எம்.பி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எம்.பி படுகாயமடைந்தார்.

Advertisment

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மக்களவை தொகுதியின் பாஜக எம்.பி திரத் சிங் ராவத். இவர் இன்று காலை (10/11/2019) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கார் பிம்கோடா பன்ட் டீப் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

Uttarakhand: BJP MP from Garhwal, Tirath Singh Rawat's car met with an INCIDENT

இதை கண்ட அப்பகுதி மக்கள் காருக்குள் சிக்கிக்கொண்ட எம்.பியை மீட்டு ஹரித்துவாரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதில் எம்.பி திரத் சிங் ராவத் நலமாக இருப்பதாக கூறியுள்ளது.