Uttar Pradesh govt's affidavit in hathras case

ஹத்ராஸ் பெண்ணின் உடல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசு விளக்கமளித்துள்ளது.

Advertisment

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Advertisment

இந்த பிரமாணப் பத்திரத்தில், "இந்த வழக்கில் யாருடைய தலையீடும் இன்றி, நியாயமான விசாரணையை சிபிஐ மேற்கொள்ள நீதிமன்றம் வழிநடத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக ஒரு "தீய பிரச்சாரம்" கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. காலையில் பெரிய அளவிலான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக இறந்த பெண்ணின் உடலை இரவில் தகனம் செய்ய பெற்றோரை மாவட்ட நிர்வாகம் சமாதானப்படுத்தியது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.