ADVERTISEMENT

35 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்தது; கங்கை ஆற்றில் நிகழ்ந்த சோகம்

12:56 PM May 23, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள மால்தேபூரில் நேற்று கங்கை ஆற்றின் கரையில் சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என சுமார் 35 பேர் படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகின் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகமும் பலமாக இருந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் சிலர் நீந்தி ஆற்றின் கரைக்கு வந்துள்ளனர். மேலும் படகில் இருந்தவர்கள் நீரில் விழுந்து தத்தளித்தனர்.

ஆற்றில் சிக்கி தத்தளித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகில் பயணம் செய்த 3 பெண்கள் பலியாகியுள்ளனர். நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மீட்புப் படையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பல்லியா மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "படகின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும், அப்போது அங்கு பலத்த காற்று வீசியதன் காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்ததன் மூலம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT