Advertisment

லட்டு திருவிழாவில் விபத்து; 7 பேர் உயிரிழந்த சோகம்!

Uttar Pradesh Baghpat Baraut city Laddu festival incident

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள பாரௌத் நகரில் ஜெயின் சமூகத்தினர் லட்டு திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் போது மரப் பலகையிலான ஒரு கண்காணிப்பு கோபுரம் இடிந்து விழுந்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.இது தொடர்பாக பாக்பத் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அர்பித் விஜய்வர்கியா, கூறுகையில், "பாரௌத்தில் ஜெயின் சமூகத்தினரின் லட்டு நிகழ்ச்சியின் போது கண்காணிப்பு கோபுரம் இடிந்து விழுந்தது. இதனால் சுமார் 20 இலிருந்து 25 பேர் காயமடைந்தனர்.

Advertisment

அதிலும் குறிப்பாக 2 இலிருந்து 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாக்பத் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனித்து வருகிறார். இது குறித்துக் கேட்டறிந்த அவர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லட்டு திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 7 பேர் பலியாகியுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் லட்டு பிரசாதம் வாங்கச் சென்ற 7 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

incident Festival laddu uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe