Advertisment

கொலை வழக்கு; முன்னாள் எம்பிக்கு ஆயுள் தண்டனை!

uttar pradesh advocate umesh pal incident case court judgement

Advertisment

உத்தரப் பிரதேசத்தில் கடந்த2005 ஆம் வருடம் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜுபால் என்பவர் மர்ம நபர்களால்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் மாஃபியாவாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் எம்எல்ஏவுமான காலித் அசீம் உள்ளிட்ட சிலர் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

மேலும் எம்எல்ஏ ராஜுபால் கொலையில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் என்பவரை கடந்த மாதம் 24 ஆம் தேதி பிரயாக்ராஜில் அவரது வீட்டுக்கு அருகில் மர்ம கும்பல் ஒன்றுசுட்டுக் கொன்றது. இந்த சம்பவத்தின்போது படுகாயம் அடைந்த இரண்டு பாதுகாவலர்களும் பின்னர் உயிரிழந்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாகவும் முன்னாள் எம்பி அத்திக் அகமதுஅவரது சகோதரர் காலித் அசீம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் அத்திக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன் 1 லட்சம்ரூபாய் அபராதமும் விதித்து பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்திக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் உள்ளிட்ட 7 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

police Samajwadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe