ட்

உத்தர பிரதேசம் மதுரா மாவட்டம் நாஜீல் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேத்ரம்(40). மனைவி, மகன்,மகளுடன் வசித்து வந்த இவர், நேற்று இரவு தனது மனைவி ராஜகுமாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த் சேத்ரம், தனது துப்பாக்கியால் மனைவியை சுட்டுள்ளார். இதை தடுக்க முயன்ற தனது மகளையும் சுட்டுள்ளார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

Advertisment

அப்படியும் ஆத்திரம் தீராமல், தனது 14 வயது மகனையும் துப்பாக்கியால் சுட முயன்றபோது, துப்பாக்கியை கைப்பற்றினார் மகள். சகோதரனை காப்பாற்றும் நோக்கில் தந்தையை சுட்டார். இதில், சேத்ரம் உயிரிழந்தார்.

Advertisment

காயமடைந்த ராஜகுமாரி மற்றும் அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.