அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

இந்தியாவில் 36 மணி நேர சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அமேரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (24/02/2020) இந்தியா வந்தார். அவருடன் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னரும் வந்திருந்தனர்.

US President Donald Trump departs

அகமதாபாத் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிபர் ட்ரம்ப்பும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். குறிப்பாக உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலை சுமார் ஒன்றரை மணி நேரம் சுற்றிப் பார்த்தனர். அதேபோல் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர். மேலும் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

US President Donald Trump departs

அதைத் தொடர்ந்து டெல்லியில் குடியசுத்தலைவர் மாளிகையில் நடந்த இரவு விருந்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மனைவி மெலனியா கலந்துக்கொண்டனர். அதன் பிறகு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா புறப்பட்டனர்.

Delhi donald trump India US president
இதையும் படியுங்கள்
Subscribe