தமிழில் இந்தியன் உட்பட பாலிவுட்டின் பல படங்களில் நடித்தவர் ஊர்மிளா.

urmila matondkar resigns from congress party

Advertisment

காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் தற்போது அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர், காங்கிரஸ் சார்பாக மும்பை வடக்கு மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்த இவர் பின்னர் அரரசியல் களத்திலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் தற்போது அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ள அவர், கட்சியின் முன்னேற்றத்திற்காக திட்டங்களை வகுக்காமல், அதற்கு பதிலாக மும்பை காங்கிரஸில் மோசமான அரசியல் நடக்கிறது. அதன் காரணமாகவே கட்சியை விட்டு விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.