சிவசேனாவில் இணைந்தார் நடிகை ஊர்மிளா மடோண்ட்கர்...

urmila matondkar joins shivsena

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஊர்மிளா மடோண்ட்கர், காங்கிரஸ் சார்பாக மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியடைந்த இவர், பின்னர் அரசியல் களத்திலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த அவர், "கட்சியின் முன்னேற்றத்திற்காகத் திட்டங்களை வகுக்காமல், அதற்குப் பதிலாக மும்பை காங்கிரஸில் மோசமான அரசியல் நடக்கிறது. அதன் காரணமாகவே கட்சியை விட்டு விலகுகிறேன்" எனத் தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். மகாராஷ்ட்ர கவுன்சில் தேர்தலில், 12 வேட்பாளர்களில் சிவசேனா வேட்பாளராக ஊர்மிளா பெயரும் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் இன்று சிவசேனாவில்இணைந்துள்ளார்.

congress shivsena
இதையும் படியுங்கள்
Subscribe