மும்பை வடக்கு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை ஊர்மிளா போட்டியிடப்போவதாக அத்திகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/urmila-std_0.jpg)
ஹிந்தியில் பல படங்களில் நடித்த இவர், தமிழில் இந்தியன் படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்தபின் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us