UPSC exam TimeTable issue

Advertisment

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நீட்டித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இருந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. தற்போது மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு இந்தியாவில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.

இந்நிலையில் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்றும்,சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமின்றி இதர தேர்வுக்கான புதிய தேதியும் ஜூன் 5ல் அறிவிக்கப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.