/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dffgfd.jpg)
UPSC தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் அகில இந்திய அளவில் 420 -ஆவது இடத்தைப் பிடித்த இளைஞரின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 829 பணியிடங்களுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு கடந்த 2019 செப்டம்பரில் நடைபெற்றது. இந்தத் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் 420 -ஆவது இடத்தைப் பிடித்த இளைஞரின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியலில் எதிரெதிர் துருவங்களாகப் பார்க்கப்படும் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோரின் பெயரை அந்த இளைஞர் ஒருங்கே கொண்டதே இதற்கான காரணம். ராகுல் மோடி எனப் பெயர் கொண்ட அந்த இளைஞர், தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் 420 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனையடுத்து அவரின் பெயர் தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருவதோடு பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)