Skip to main content

சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மார்ச் 3- ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. 
 

UPSC ANNOUNCED HAS CIVIL SERVICE EXAM

இது தொடர்பாக யுபிஎஸ்சி  வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்று (பிப்ரவரி 12) முதல் மார்ச் 3- ஆம் தேதி மாலை 06.00 PM மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய தள முகவரி https://upsconline.nic.in ஆகும். மே 31- ஆம் தேதி தேர்வு நடைபெறும். "இவ்வாறு யுபிஎஸ்சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/examinations/Civil%20Services%20%28Preliminary%29%20Examination%2C%202020 என்ற இணைய தளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். 


இந்த தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃ ப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட 796 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister M.K. Stalin's Pride

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 347 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர் (OBC) பிரிவில் 303 மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ். 115 மாணவர்களும், எஸ்.சி. 165, எஸ்.டி. 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் இரண்டாமிடமும் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுவையில், “மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

Chief Minister M.K. Stalin's Pride

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.