Skip to main content

டெல்லியில் அசத்திய மாணவர்கள்; ஆளுநர் தமிழிசை நேரில் வாழ்த்து

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Unreal students in Delhi; Greet Governor Tamilisai in person

 

புதுச்சேரியில் டில்லி குடியரசு தின விழாவில் பதக்கங்கள் பெற்ற தேசிய மாணவர் படை வீரர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.

 

ஜனவரி 26 டில்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் மொத்தம் 17 என்.சி.சி மாணவர் படைகள் பங்கேற்றன. அதில், புதுச்சேரி-தமிழகம்-அந்தமான் நிக்கோபர் இயக்குநரகத்தை சேர்ந்த என்.சி.சி கடற்படை, விமானப்படை, தரைப்படை மாணவர்கள் பொதுத்திறமை, தனி நடனம், குழு நடனம், கலாச்சார போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளனர். பதக்கங்கள் மற்றும் கோப்பைகளோடு புதுச்சேரி திரும்பிய புதுச்சேரி-தமிழ்நாடு-அந்தமான் இயக்குநரகத்தை சேர்ந்த தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி-தமிழகம்-அந்தமான் இயக்குநரக துணை டைரக்டர் ஜெனரல் கமாண்டர் அடுல் குமார் ரஸ்தோகி, புதுச்சேரி குரூப் கமாண்டர் கர்னல் சோம்ராஜ் குலியா ஆகியோர் பங்கேற்றனர். குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்று பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்ற என்.சி.சி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், "குடியரசு தின விழாவில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள உங்கள் அனைவரையும் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பெருமையான ஒன்று. உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி உங்களுக்கு தன்னம்பிக்கையையும் கலை, கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தையும் தந்திருக்கிறது. முன்பெல்லாம் ராணுவம், காவல்துறை, என்.சி.சி போன்ற துறைகளில் பெண்கள் பங்கேற்பதில் தயக்கம் இருந்தது. பாரதி சொன்னதைப் போல நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு மிடுக்காக பெண்கள் வரும்போது, உண்மையிலேயே ஒரு பெண்ணாக பெருமை அடைகிறேன். அதற்காக அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல இன்னும் பல துறைகளில் அவர்கள் முன்னுக்கு வருவதற்கான உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் தர வேண்டும்"  என்று குறிப்பிட்டார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.