Skip to main content

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரை குற்றவாளி என கூறி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

unnao case verdict by tiz hazari court

 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோவ் பகுதியை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர்  கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் வீட்டிற்கு சென்றபோது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார். அந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் தந்தை காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் தந்தை இறப்பிற்கு சாட்சியமாக இருந்த நபரும் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் தாய் மற்றும் அத்தையின் பாதுகாப்பில் அப்பெண் வாழ்ந்து வந்த சூழலில், லாரி மோதி அப்பெண்ணின் தாயும், அத்தையும் சமீபத்தில் உயிரிழந்தனர். இதுதொடர்பாக குல்தீப் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் பாலியல் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.


இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த டிஸ் ஹசாரி நீதிமன்றம், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என அறிவித்தது. எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான சஷி சிங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டவில்லையா? - ஆய்வு செய்ய பரிசீலனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Consideration to study whether Taj Mahal was built by Shahjahan or not

 

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இன்று இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

 

 

Next Story

“குல்தீப்பை சேர்க்காதது சரியான முடிவு” - இரண்டாவது டெஸ்ட் குறித்து கே.எல்.ராகுல் விளக்கம்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

"Not including Kuldeep was the right decision" KL Rahul explained about the second Test

 

குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது சரியான முடிவு தான் என டெஸ்ட் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.  

 

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் போட்டித் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

 

இதன் பின் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை.

 

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குல்தீப் யாதவ் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 8 விக்கெட்களையும் 40 ரன்களையும் எடுத்தார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

 

இதற்கு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்திய கே.எல்.ராகுல் பதில் அளித்துள்ளார். அதில், “குல்தீப்பை ப்ளேயிங் 11ல் சேர்க்காதது கடுமையான முடிவு தான். சமீபத்தில் தான் அவர் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆனால், முதல் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் மைதானத்தைப் பார்க்கும்போது இத்தகைய முடிவு எடுக்க வேண்டியதானது.

 

2 ஆவது டெஸ்ட் போட்டி நடந்த டாக்கா மைதானத்தில் நாங்கள் எடுத்த 20 விக்கெட்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இந்த மைதானத்தில் இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளோம் அந்த அனுபவத்தை மனதில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்தோம். நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு நீளும் டெஸ்ட் போட்டியில் உங்களுக்கு சமநிலையான தாக்குதல் முறை தேவை. அதனால் குல்தீப் யாதவை அணியில் எடுக்காதது சரியான முடிவு தான்” எனக் கூறியுள்ளார்.