Advertisment

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபர்!

ajit doval

Advertisment

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வருபவர் அஜித் தோவல். இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மர்ம நபர், மன நலன் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாகவும், அவர் ஒரு வாடகை காரை ஓட்டி வந்ததாகவும் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டிற்குள் மர்ம நபர் நுழைய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe