Skip to main content

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபர்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

ajit doval

 

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வருபவர் அஜித் தோவல். இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மர்ம நபர், மன நலன் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாகவும், அவர் ஒரு வாடகை காரை ஓட்டி வந்ததாகவும் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டிற்குள் மர்ம நபர் நுழைய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

போதைப் பொருள் கடத்தல்; தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
delhi police incident Contact for Tamil film producer

போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.